வேளியூர் ஏரி கலங்கலுக்கு திருகு ஆணி அமைக்க கோரிக்கை

வேளியூர் ஏரி கலங்கலுக்கு திருகு ஆணி அமைக்க கோரிக்கை

திருகு ஆணி அமைக்க கோரிக்கை

வேளியூர் ஏரி கலங்கலுக்கு திருகு ஆணி அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் ஏரியில், நீர்வளத் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, உபரி நீர் வெளியேறும் கலங்கல், வேளியூர் கிராமத்தில் இருந்து, சிறுவாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ளது.

இந்த தடுப்பு பலகையின் நடுவே இருந்த, இரும்பிலான திருகு ஆணி இல்லை. இதனால், மழை காலங்களில் ஏரி நிரம்பினால், உபரி நீரை திறந்து விட முடியாத நிலைக்கு உள்ளது.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்லும் போது, உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உபரி நீர் வெளியேறும் தடுப்பு பலகைக்கு திருகு ஆணி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story