அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க கோரிக்கை.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க கோரிக்கை.

அரசு மேல்நிலைப்பள்ளி 

மரக்காணம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 20 - க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆவர். இவர்களின் பிள்ளைகள் ஆரம்பப் பள்ளி முடித்துவிட்டு மேல்நிலை படிப்புக்கு மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்குத்தான் வரவேண்டிய நிலை உள்ளது.

ஆனால் மரக்காணத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் பெண்களுக்கு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மரக்காணத்தில் இரு பாலருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது.இந்தப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களும் 11 மற்றும் 12 ஆம் இரு பாலருக்கும் என மொத்தம் இந்தப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் பள்ளியில் அடிக்கடி ஒரு சில பிரச்சனைகள் உண்டாவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

நேற்று முன்தினம் மாலையில் கூட மரக்காணம் பேருந்து நிலையம் இரு தரப்பு மாணவிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதில் மாணவிகள் ஒருவரை ஒருவர் முடி பிடித்து அடித்து தாக்கிக் கொண்டதாகவும், இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பெண்களுக்கென தனியாக அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்தாலோ அல்லது மரகானத்தில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் தான் மரக்காணம் மட்டுமல்லாமல் பல கிராமங்களில் இருந்து கூட மாணவிகள் இங்கு வந்து படிக்கும் நிலை உண்டாகும்.

இதனால் மாணவிகளின் கல்வித்தரம் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் சிறப்பான நிலைக்கு வர முடியும். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மரக்காணம் பகுதி மாணவிகளின் எதிர்கால நலன் கருதி தனியாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story