நாகர்கோவிலில் மல்டி லெவல் கட்டண வாகன பார்க்கிங் அமைக்க கோரிக்கை

நாகர்கோவிலில் மல்டி லெவல் கட்டண வாகன பார்க்கிங் அமைக்க கோரிக்கை

போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவிலில் மல்டி லெவல் கட்டண வாகன பார்க்கிங் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் தீராத பிரச்சினையாக போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. முக்கிய சாலைகளில் ஏற்படும் வாகன நெருக்கடியால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக பண்டிகை நாட்கள் விடுமுறை நாட்களில் கடைவீதிகளில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நாகர்கோவிலில் வாகன பார்க்கிங் வசதி அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாளாக கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் மல்டி லெவல் கட்டண பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.

கார் பைக் விலை நிறுத்தும் வகையில் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு வசதிகளுடன் கூடிய பார்க்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக வடசேரி, வேப்ப மூடு, செட்டிகுளம் அல்லது டதி பள்ளி சந்திப்பு போன்ற இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு பற்றிய ஆய்வு மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தொடங்கியுள்ளனர்.

இடம் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் எவ்வளவு நிதி எத்தனை அடுக்கு பார்க்கிங் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Tags

Next Story