புதுகையில் கோளரங்கம், அறிவியல் பூங்காக்களை அமைக்க கோரிக்கை
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு
புதுக்கோட்டையில் நடைபெற்ற இயக்கத்தின் மாவட்ட மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம், அறிவியல் பூங்கா மற்றும் கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.தமிழக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மதிப்பூதியத்தில் தன்னார்வலர்களுக்கு குறைந்த பணியாற்றும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி கடற்கரை அருகில் உள்ள மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளை உள்ளடக்கிய மாணவர்கள் கிராமப்புற பயன்பெறும் வகையில் புதியதாக ஓர் அரசு கலை அறிவியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும். தயாரிக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கையை மாநிலக் தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.