தற்காலிக நிழல் குடைகள் அமைக்க கோரிக்கை

தற்காலிக நிழல் குடைகள் அமைக்க கோரிக்கை

சோழவந்தான் பேருந்து நிலையங்களில் தற்காலிக நிழல் குடைகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சோழவந்தான் பேருந்து நிலையங்களில் தற்காலிக நிழல் குடைகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில் பேருந்து நிலையம் வட்ட பிள்ளையார் கோவில், பேட்டை, பேருந்து நிறுத்தம், ஜெனகை மாரியம்மன் கோவில் , வேப்பமர ஸ்டாப், இபி பேருந்து ஸ்டாப் ,காவல் நிலைய பேருந்து நிறுத்தம், பசும்பொன் நகர் வாடிப்பட்டி ரோடு, ஆகிய பத்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கும் வந்து செல்கிறது. மேலும், சோழவந்தானிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும் இல்லாததால், வெப்பநிலை காலங்களிலும் மழைக்காலமானாலும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . இது குறித்து, பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கூறுகையில்: சோழவந்தான் பகுதியில் உள்ள எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும் பயணிகளுக்கான நிழல் குடைகள் இல்லை பல்வேறு முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் இதுகுறித்து, யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் அதிக அளவில் காத்திருப்பதால் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். பேருந்தும் குறிப்பிட்ட இடைவெளியில் வராமல் திருமங்கலம் அண்ணா பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி போன்ற பகுதிகளுக்கு செல்வோர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஆகையால், பொதுமக்களின் இத்தகைய சிரமங்களை கருத்தில் கொண்டு பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக நிழற்குடையாவது அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story