ஆண்டிபட்டி உழவர் சந்தையை வேறு பகுதிக்கு மாற்ற கோரிக்கை

ஆண்டிபட்டி உழவர் சந்தையை  வேறு பகுதிக்கு மாற்ற கோரிக்கை

உழவர் சந்தை

ஆண்டிபட்டியை மையமாக கொண்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான புள்ளிமான் கோம்பை, புதூர், தர்மத்துப்பட்டி முதல் கணேசபுரம் உட்பட 50 கிராமங்களில் ஆண்டு முழுவதும் காய்கறிகள் அதிகம் சாகுபடி செய்கின்றனர். தினமும் பல டன் விளையும் பல வகை காய்கறிகள் ஆண்டிபட்டி மற்றும் மதுரை மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது.

விளைச்சல் அதிகமானால் விலை கிடைக்காமலும், விலை கிடைக்கும்போது விளைச்சல் இல்லாமலும் விவசாயிகள் தொடர்ந்து பாதிப்படைகின்றனர். விவசாயிகள் உழவர் சந்தை மூலம் விளைபொருட்களை மக்களுடன் நேரடியாக சந்தைப்படுத்த வசதியாக 2009ல் ஆண்டிபட்டியில் உழவர் சந்தை துவக்கப்பட்டது. முறையான திட்டமிடல் இன்றி அவசரகதியில் வாரச்சந்தையின் ஒதுக்கு புறமான இடத்தில் உழவர் சந்தைக்கு துவங்கி அதற்கான கட்டிடங்களும் கட்டப்பட்டது.

நகர் பகுதியில் இருந்து ஒரு கி.மீ., தூரம் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்த உழவர் சந்தைக்கு பொதுமக்கள் வந்து செல்ல தயங்குகின்றனர். உழவர் சந்தைக்கு முன்பே மெயின் ரோடு, கடைவீதி, நாடார் தெரு உட்பட பல இடங்களில் காய்கறி வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளனர். இதனை கடந்து உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதுபற்றி ஆரம்பம் முதலே அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. உழவர் சந்தைக்கான இடத்தை மாற்றி அமைக்க பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கையும் இல்லை. இதனால் உழவர் சந்தையில் பதிவு பெற்ற விவசாயிகள் கடைகள் அமைக்க ஆர்வமில்லை.

பொதுமக்கள் கூறுகையில், 'தேனியை போன்று ஆண்டிபட்டியிலும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் உழவர் சந்தை அமைந்தால் பலருக்கும் பயன்படும். விவசாயிகளும், வியாபாரிகளின் பிடியிலிருந்து மீண்டு தங்கள் பொருட்களை எளிதில் சந்தை படுத்த முடியும்.

Tags

Next Story