திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திமுக ஒன்றிய செயலாளர்  மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பலூரில் திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.


பெரம்பலூரில் திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் பாமக மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் ராமதாசை அவமரியாதையாகவும், இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் செந்தில்குமார்தலைமையில், கட்சி நிர்வாகிகளுடன் மே 13ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர், அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன் பொது இடங்களில் தங்கள் சமூக மக்களிடையே ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் இழிவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

அதில் , பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவன மருத்துவர் ராமதாசை அவமரியாதையாகவும், தன் சமூகமான பட்டியல் சமூகத்தில் தனக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வன்னியர் சமூகத்தின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்தில் போலியான அவதூறு கருத்துக்களை பேசி உள்ளதோடு இருசமூக மக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தி ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள மதியழகன் மீது தகுந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அழுத்திருப்பதாகவும் மனு மீது நடவடிக்கை இல்லை என்றால், மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவழங்கும் நிகழ்ச்சியின் போது வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன், மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின், பெரம்பலூர் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, மாவட்ட துணைத் தலைவர் செந்தில், மாவட்டத் துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் தமிழரசன் செல்லம் ரவி பிரபு சீனிவாசன் ரங்கராஜ் மேட்டூர் ரமேஷ் சிவசூரியன் சுதாகர் சின்னையன் கதிரேசன், உள்ளிட்டநிர்வாகிகள் மகளிர் அணியினர் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story