அரசு அளித்த பட்டாவை இணையதளத்தில் பதிவேற்ற கோரிக்கை

அரசு அளித்த பட்டாவை  இணையதளத்தில் பதிவேற்ற கோரிக்கை

மனு அளிக்க வந்தவர்கள்


அரசு சார்பில் கொடுக்கப்பட்ட பட்டாவை கெசட் மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரி பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 26 ஆவது வார்டு புத்தூர் கல்லங்காடு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதிக்கு உட்பட்ட இந்த பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டுமனை கேட்டு அப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்.

மனுவை பரிசீலித்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அரசு இலவச வீட்டு மனை பட்டாவிற்கு அனுமதி அழித்து, அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பட்டாவை அரசு கெசட்டிலும், இணையதளத்திலும் ஏற்ற வில்லை.

இதுகுறித்து அரசு அதிகாரியிடம் முறையிட்டால் அரசு அதிகாரிகள் இது அரசு புறம்போக்கு நிலம் என்றும் மயானத்திற்கு சொந்தமான இடம் என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story