சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

சீமை கருவேல மரங்கள்

பூந்தமல்லி வெளிவட்ட சாலையில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

சென்னை-- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தென்மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வருகின்றன. இதில், 30 சதவீத வாகனங்கள் பெங்களூரு, கோல்கட்டா ஆகிய இடங்களுக்கு செல்கின்றன. இந்த வாகனங்கள், சென்னைக்குள் நுழைவதை தடுக்க வண்டலுார்- - -மீஞ்சூர் இடையே, வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் நடுவே, எதிர்காலத்தில் ரயில் போக்குவரத்திற்காக, 30 அடி அகலத்திற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில், குன்றத்துார், வரதராஜபுரம், மலையம்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. மேலும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. இந்த மரங்களை அகற்றி வேம்பு, நாவல் உள்ளிட்ட நாட்டு வகை மரங்களை நடவு செய்ய வேண்டும். குப்பை கொட்டி எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story