சிவகங்கை மாவட்டத்தில் 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு !

சிவகங்கை மாவட்டத்தில் 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு !

ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய ஆய்வில் 10 குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களது கல்விக்கு உறுதுணை புரிந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நல உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினர் தேவகோட்டை, திருப்புத்துார், காரைக்குடி, சிவகங்கை, கல்லல், சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதி கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்படவில்லை. அதே நேரம் வயது 14 முதல் 18 க்கு உட்பட்ட 10 வளரிளம் தொழிலாளர்கள் கடைகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதை கண்டறிந்து அவர்களை மீட்டனர். இவர்களுக்கு உரிய கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வயது 18 க்கு உட்பட்ட வளரிளம் பருவ குழந்தைகளை செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையை மீறினால் ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் குழந்தை தொழிலாளர் இருப்பது கண்டறிந்தால் 1098 அல்லது 04575- 240521 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story