கொள்ளிடம் ஆற்றின் மூழ்கி மாயமான 10 ம் வகுப்பு மாணவனை சடலமாக மீட்பு

கொள்ளிடம் ஆற்றின் மூழ்கி மாயமான 10 ம் வகுப்பு மாணவனை சடலமாக மீட்பு

மாணவனை சடலமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் நீரில் மூழ்கி மாயமான 10 ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த லூடஸ் என்பவரது மகன் 15 வயதான சாம்ரோஷன்.இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று மதியம் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் தடுப்பணை பகுதியில் தனது சக நண்பர்களுடன் சென்று குளித்துள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் நேற்று மதியம் 2.00 மணியிலிருந்து மாலை 6:30 மணி வரை மாணவனை தேடும் பணியில் 20க்கும் மேற்பட்டோர் தீவிரமாக தேடி வந்தனர். மாணவனைனை தேடும் பணி மீண்டும் இன்று காலை 5.30 மணி முதல் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ட்ரோன் கேமரா மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மாணவனை தேடும் பணி நடைபெற்று வந்தது.தீவிர தேடுதலுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார் .

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் நண்பர்களுடன் குளிக்க சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story