தோட்ட கிணற்றில் இருந்த 20 அடி நீள முதலை மீட்பு.

சிறுமுகை வனச்சரக ஓடந்துறை பகுதியில், தோட்டக் கிணற்றில் இருந்த 20 அடி நீளமுள்ள முதலையை, கிரேன் உதவியுடன் மீட்டு கூண்டில் அடைத்து கூத்தாமண்டி பகுதி பவானிசாகர் நீர்தேக்க பகுதியில் விடுவிக்கப்பட்டது.

கோவை: சிறுமுகை வனச்சரக ஓடந்துறை பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில், முதலை இருப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் தோட்டத்திற்கு விரைந்தனர். கிணற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதை கண்ட அவர்கள், முதலையை பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். மின்பம்ப் மூலம் தண்ணீரை வெளியேற்றிய நிலையில் 20 அடி நீளமுள்ள முதலையை, கிரேன் உதவியுடன் மீட்டு கூண்டில் அடைத்து கூத்தாமண்டி பகுதி பவானிசாகர் நீர்தேக்க பகுதியில் விடுவித்தனர்.

Tags

Next Story