செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த பசு மாடு மீட்பு

செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த பசு மாடு மீட்பு

நாகர்கோவில் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.


நாகர்கோவில் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் பூதலிங்கம். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக செப்டிக் டேங்க் தோண்டப்பட்டு அதன் மேல் காங்கிரீட் போடப்பட்டுள்ளது. ஆனால் 2 அடி சுற்றளவுக்கு மட்டும் மூடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பசு மாடு இதன் மேல் நடந்து சென்ற போது மூடப்படாமல் இருந்த துவாரம் வழியாக செப்டிக் டேங்க் உள்ளே விழுந்தது.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். காங்கிரீட்டை உடைத்தால் மட்டுமே மாட்டை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி கோட்ட அலுவலர் துரை என்பவர் தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் கான்கிரீட் மூடியை உடைத்து கம்பிகளை அறுத்து அகற்றிய பின், கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மாடு மீட்க்கப்பட்டது.

Tags

Next Story