செங்கல்பட்டு அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

செங்கல்பட்டு அருகே தண்ணீர் இல்லாத  கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு வீரர்கள், கயிறு வாயிலாக உயிருடன் மீட்டனர்.

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு வீரர்கள், கயிறு வாயிலாக உயிருடன் மீட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுகுமார், 44. அதே பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும், பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று காலை அறுவடை செய்த நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது, எதிர்பாராத விதமாக பசு மாடு ஒன்று, அப்பகுதியில் இருந்த தண்ணீர் இல்லாத உறை கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கயிறு வாயிலாக பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story