கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
மீட்கப்பட்ட பசு மாடு
பொன்னமராவதி அருகே 40 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு சொந்தமான பசுமாடு அதே பகுதியில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்ததும் பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான மீட்பு படையினர் வந்து பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Next Story