தெப்பத்தில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
திண்டுக்கல் YMR-பட்டியில் நடைப்பயிற்சி குளம் எதிரே உள்ள தெப்பத்தில் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் YMR-பட்டியில் நடைப்பயிற்சி குளம் எதிரே உள்ள தெப்பத்தில் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் YMR-பட்டி நடைப்பயிற்சி குளம் எதிரே உள்ள தெப்பத்தில் பசுமாடு தவறி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரம் போராடி அந்த பசு மாட்டை மீட்டனர். மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை புல்வெளி வயல்களில் மேய விடாமல். ரோடுகளில் குளங்களிலும் மேய விடுவதால் அடிக்கடி தவறி விழுந்து மாடுகள் பலியாகின்றன. மாடுகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து விபத்துகளை சந்திக்கின்றனர். ரோடுகள் குறுக்கும் நெடுக்கமாக ஓடும் மாடுகளால் திண்டுக்கல் நகர் நகரில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இவற்றை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story