திண்டிவனம் அருகே கிணற்றுக்குள் விவசாயி பிணமாக மீட்பு

திண்டிவனம் அருகே கிணற்றுக்குள் விவசாயி பிணமாக மீட்பு

கோப்பு படம்

திண்டிவனம் அருகே கிணற்றுக்குள் விவசாயி பிணமாக மீட்கப்பட்டுள்ளர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேலாதனூர் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுப் பிரமணி மகன் விஜயராகவன் (வயது 45). விவசாயி. இவர் நேற்று காலை, நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார், அப்போது அவரது அண்ணன் வெங்கட்ராமன் அவருக்கு போன் செய்தார்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து நிலத்துக்கு சென்று அவர் பார்க்கையில், விஜயராகவன் சென்ற மோட்டார் சைக்கிள் அங்கு நின்று கொண்டிருந்ததுடன், செல்போ னும் அங்கு இருந்தது. ஆனால் விஜயராகவனை காணவில்லை. இதையடுத்து அவரை அந்த பகுதியில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை,

இதையடுத்து அங்குள்ள கிணற்றுக்குள் அவர் விழுந்து இருக்க லாமா? என்று வெங்கட்ராமனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றுக்குள் தேடினர். அப்போது, அங்கு விஜயராகவனை பிண மாக மீட்டு கொண்டு வந்தனர். விஜயராகவன் உடலை வெள்ளி மேடு பேட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இதுகுறித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றுக்குள் விவசாயி மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story