பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் விழுந்தவர் மீட்பு
தென்காசியில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் விழுந்தவர் மீட்கப்பட்டார்.
தென்காசி அருகில் உள்ள ஆய்க்குடி அரசு மருத்துவமனை அருகில் சுமார் 50 அடி ஆழமுள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் அருகே இந்தப் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் ஓரத்தில் நடந்து சென்ற போது எதிர்பாரவிதமாக தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டது. இதை கண்ட பகுதி பொதுமக்கள் தென்காசி தீயணைப்பு துறைக்கு தகவல் கிணற்றில் விழுந்தவரை மீட்பு படையினரால் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இந்த சேவையை செய்த தீயணைப்பு துறையினரை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story