சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை மீட்பு

சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை மீட்பு

மீட்கப்பட்ட ஆமை

சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை மீட்கபட்டது.

சேதுபாவாசத்திரம் அருகே, மீனவர்கள் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே, உள்ள சின்னமனை மீனவர் கிராமத்தில் இருந்து, மகாலிங்கம் மகன்கள் சிவபாலன்,

ஷியாம் குமார் இருவரும் தங்களது படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், மீன் பிடித்து கரை திரும்பிய அவர்கள் வலையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மீனவர்கள் இருவரும் வலையிலிருந்த கடல் ஆமையை மீட்டு, உயிருடன் கடலில் விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் மீனவர்கள் இருவரையும் பாராட்டினார். மேலும், மீனவர்கள் இருவருக்கும் விரைவில் நடைபெற உள்ள பாராட்டு விழாவில் சான்றிதழ், ரொக்கப் பணம் பரிசு வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story