மத்தூர் அருகே சின்னாறு ஏரியில் அழகிய நிலையில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
சடலமாக மீட்கபட்டவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே சின்னாறு ஏரியில் மிகுந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர். மத்தூர் அருகே சின்னாறு ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழகிய நிலையில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இது குறித்து தகவலின் பெயரில் மத்தூர் போலீசார் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் குழுவினர் சடலத்தை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மத்தூர் அருகே உள்ள முக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடைய இளைய மகன் அறிவழகன் 35 இவர் ஊரில் சிமெண்ட் மூட்டை இறக்கும் கூலித்தொழில் செய்பவர் என்றும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது என்பதை தெரியவந்தது.
மேலும் அறிவழகனின் மனைவி தேவியிடம் சடலத்தை காண்பித்து அங்க அடையாளங்களுடன் உறுதி செய்யப்பட்ட நிலையில் தேவியளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு அவர் இறந்தாரா தற்கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.