மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு - கணவருடன் அனுப்பி வைத்த போலீசார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு - கணவருடன் அனுப்பி வைத்த போலீசார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கணவருடன் அனுப்பி வைப்பு 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த முக்தியார் (34) என்ற பெண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, பெண் தலைமைக் காவலர் லீலா ஆகியோர்கள் கடந்த டிசம்பர் 6 ம் தேதி மீட்டு பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அப்பெண்ணிற்கு மனநல மருத்துவர் மூலம் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முக்தியாரின் கணவரான சென்னை ராயபுரம், பகுதியை சேர்ந்த ராஜ்கமலிடம் 37 ., அவர் ஒப்படைக்கப்பட்டார். இச்செய்தியறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story