கிணற்றில் விழுந்து உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

கிணற்றில் விழுந்து உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் சடலம்

பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த நபரின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி அருகே உள்ள கிணற்றில், பிப் 25ம் தேதி மாலை 7 மணியளவில், ஆண் சடலம் கிடப்பதாக அவ்வழியே சென்ற நபர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை செய்ததில் கிணற்றில் சடலமாக மிகுந்தது செஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நகுலன் என்பவரது மகன் மகாமணி வயது 48 என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சுமார் 60 அடிக்கு மேல் ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பல மணி நேரங்கள் போராடி இரவு நேரத்தில் இறந்து போன மகாமணியின் உடலை பிப்ரவரி 26ம் தேதி அதிகாலையில் வெளியே மீட்டு எடுத்து ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் போலீசாரிடம் உடலை ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மகாமனி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story