குழந்தைத் தொழிலாளர்கள் இருவர் மீட்பு !
குழந்தைத் தொழிலாளர்
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா என சோதனை மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஜூன் 13ஆம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று குழந்தைகள் நல சிறப்பு உதவி ஆணையர் மூர்த்தி, ஆய்வாளர் . ராணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து சட்ட ஆலோசகர் கோபிநாத் ஆகியோர்கள் இணைந்து கடைகள் மற்றும் கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் குன்னத்தில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டு குழந்தைகள் நல அலகில் ஒப்படைத்தனர். மேலும் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் எவரேனும் உள்ளனரா என்றும், குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.