அரசு மருத்துவமனையில் மீட்புப் பணி: பேரிடா் மீட்புப் படை ஆய்வாளா் தகவல்
மீட்பு பணி
வெள்ளத்தின்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் விரைந்து மீட்கப்பட்டதாக பேரிடா் மீட்புப் படை ஆய்வாளா் ரவி தெரிவித்தார் .
பேரிடா் மீட்புப் படை ஆய்வாளா் ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 17,18 ஆகிய நாள்களில் கனமழையால் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீா் புகுந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை-மருத்துவக் கல்லூரியில் வெள்ளநீா் புகுந்ததால், நோயாளிகளை மீட்பதற்காக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் தூத்துக்குடி வந்தனா். அவா்கள் வெள்ளத்தில் சிக்கிய நோயாளிகள், மருத்துவா்கள் உள்ளிட்டோரை ரப்பா் படகு மூலம் மீட்டனா். தொழுநோயாளிகள் பிரிவில் 30 பேரையும், மகப்பேறு பிரிவிலிருந்து சுமாா் 60 தாய்-சேய்களையும் மீட்டனா். மருத்துவமனைக்கு மருத்துவ அலுவலா்கள், நோயாளிகள் வந்து செல்ல ஏதுவாக இப்படையினா் ரப்பா் படகு, பரிசல் ஆகியவற்றை பிரதான சாலை வரை இயக்கினா். புற்றுநோயாளிகள் பிரிவில் உள்ளோருக்கு படகில் இரவு உணவு கொண்டு வந்து வழங்கப்பட்டது. வெள்ளத்தாலும், வயது மூப்பாலும் இறந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டு, கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன. 20ஆம் தேதி ஏரல் அருகே பழையகாயல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்டு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளாா்
Next Story