வழி தவறிச் சென்ற அக்கா தம்பி மீட்பு

வழி தவறிச் சென்ற அக்கா தம்பி மீட்பு

வழி தவறிச் சென்ற அக்கா தம்பியை 1 மணிநேரத்தில் மதுரவாயல் போலீசார் மீட்டனர்.


வழி தவறிச் சென்ற அக்கா தம்பியை 1 மணிநேரத்தில் மதுரவாயல் போலீசார் மீட்டனர்.
மதுரவாயல், ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், பெரியார் சாலையைச் சேர்ந்தவர் நாகப்பன் - பார்வதி தம்பதி. இவர்கள் இருவரும் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடைக்குச் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர். கடைக்குச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் தேடத் தொடங்கியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் குழந்தைகள் கிடைக்காததால், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலீசார், குழந்தைகள் தொலைந்த பகுதியில் இருந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில், குழந்தைகள் வழி தவறிச் சென்றுள்ளனர் என்பதைக் கண்டறிந்த போலீசார், வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்த இரு குழந்தைகளையும் மீட்டு பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் மாயமானது தொடர்பாக காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட மதுரவாயல் போலீசாருக்கு குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் மல்க தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும், குழந்தைகளை பத்திரமாக கவனித்துக்கொள்ளும் படி அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story