மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்கணும்!
விராலிமலையில் ஆங்காங்கே சுற்றி திரியும் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விராலிமலை பகுதிகளில் சுற்றி திரியும் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு அரசுக் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.கோயில் நகரமான விராலிமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் வரும் பக்தர்களில் சிலர் தங்களது வீடுகளில் பராமரிக்க முடியாமல் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் உடல், பாதிக்கப்பட்டோர் போன்றோரை அழைத்துவந்து இங்கேயே விட்டுச் சென்று விடுகின்றனர்.இவ்வாறு கைவிடப்பட்டோர் விராலிமலை நகர் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.
அவர்களில் பலர் மனநலம் பாதித்த நிலையில், அழுக்குத் துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு ஆடைகளுடன் கிழிந்த கால்போன போக்கில் சுற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் சாலையில் போவோர், வருவோரைத் தொந்தரவு செய்கின்றனர். அப்போது சிலர் பரிதாபப்பட்டு அளிக்கும் உணவை அவர்கள் உண்டு வாழ்கின்றனர் இல்லையென்றால் பட்டினி கிடக்கின்றனர். எனவே மீட்டு அரசு காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும். மேலும் தேவையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து அவர்களின் கடந்த கால நினைவை மீட்டு, அவர்களை புதிய மனிதர்களாக உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களி எதிர்பார்ப்பாக உள்ளது.