எஸ் ஆர் எம் நிறுவனத்தில் ஆராய்ச்சி தினம் கொண்டாட்டம்
காட்டாங்கொளத்துார் எஸ். ஆர். எம்.அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த ஆராய்ச்சி தின நிகழ்ச்சியில் நேச்சர் இன்டெக்ஸ்டு ஜானர்களில் படைப்புகளை வழங்கிய அறிஞர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் எஸ். ஆர். எம். , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், 13ம் ஆண்டு ஆராய்ச்சி தினம், கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, எஸ். ஆர். எம். , பல்கலை இணைவேந்தர் சத்யநாராயணன் தலைமை தாங்கி, மாநாடு குறித்த தொகுப்புகளின் புத்தகத்தை வெளியிட்டார். இந்திய தேசிய பொறியியல் அகாடமியின் துணை தலைவர் தேசாய், அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டார். இந்த மாநாட்டில், சத்யநாராயணன் மற்றும் தேசாய் ஆகியோர், நேச்சர் இன்டெக்ஸ்டு ஜானர்களில், 26 படைப்புகளை வழங்கிய 23 அறிஞர்களுக்கும், வெற்றிபெற்ற 124 மாணவர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், எஸ். ஆர். எம். , மருத்துவ கல்லுாரி துணைவேந்தர் ரவிக்குமார், டீன் நெப்போலியன், துணை வேந்தர் முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி, துணைவேந்தர் வினய்குமார் மற்றும் பேராசிரியர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story