நெல் விவசாயிகளுக்கு ஆராய்ச்சியாளர் அறிவுறுத்தல்
நெல் நடவு
நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை பயன்படுத்தினால் மண் வளம் அதிகரிக்கும் என வேளாண்மை ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
தென் தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதிகளில் தற்பொழுது உணவு பயிரான நெல் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை பயிருக்கு இடும்போது அளவுக்கு அதிகமான சத்துக்கள் வீணாவதை தடுப்பதுடன் மண் வளத்தையும் அதிகரிக்கலாம் என கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர் சேர்மராஜ் அறிக்கை மூலம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Next Story