பெரியபிள்ளைவலசையில் நீர்த்தேக்க தொட்டி திறப்பு

பெரியபிள்ளைவலசையில் நீர்த்தேக்க தொட்டி திறப்பு
 திறப்பு விழா
பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் பெரிய பிள்ளை வலசை ஊராட்சி பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. புதிய நீர்த்தேக்க தொட்டியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பெரிய பிள்ளைவலசை ஊராட்சி மன்ற தலைவர் வேலுச் சாமி தலைமை தாங்கி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அ. நத்தடு அம்மாள் முன்னிலை வகித்தார். பெரிய பிள்ளை வலசை ஊராட்சி செயலாளர் செல்லப்பா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில். அரசு ஒப்பந்தக்காரர் ராம்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் கள் சாந்தி, ராம்குமார், உதயகுமாரி, முத்துக் குமார், பாலா. ஈஸ்வரி மணிகண்டன், சந்தன குமார் மற்றும் கணினி இயக்குனர் குற்றாலதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story