நீர்த்தேக்க தொட்டி அகற்றம்

நீர்த்தேக்க தொட்டி அகற்றம்

பள்ளூர் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.


பள்ளூர் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை போடாத இடத்தில், 'எம்-சாண்ட்' கொட்டி, 'பேவர் பிளாக்' கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக, காஞ்சிபுரம்- - அரக்கோணம் சாலை பள்ளூர் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதை அகற்றித் தரும்படி, நெடுஞ்சாலைத் துறையினர் ஊரக வளர்ச்சி துறைக்கு பரிந்துரை செய்தனர். அதை ஏற்று, ஊரக வளர்ச்சி அனுமதியின்படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, சாலை விரிவாக்கப் பணிகளை பூர்த்தி செய்யப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story