நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர கோரிக்கை !

நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர கோரிக்கை !
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, இடையாத்தி ஊராட்சி வேலாம்பட்டி கள்ளர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து விழும் நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இதையெடுத்து பேராவூரணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடித்து விட்டனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, வேலாம்பட்டி கள்ளர் தெருவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story