சுற்றுவட்டார பகுதியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
மழை
கோவில்பட்டி, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்செந்தூர், கோவில்பட்டிபகுதியில் திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி சனி 6, ஜூலை 2024 8:03:37 AM (IST) கோவில்பட்டி, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்தது. அதேசமயம், கடலையூர், சென்னயம்பட்டி, வரதம்பட்டி, காட்டுராமன்பட்டி, பீக்கிலிபட்டி, பெருமாள்பட்டி, மீனாட்சிபுரம், லிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று நாலாட்டின்புத்தூர் மற்றும் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில் காலை முதல் மதியம் 3 மணி வரை வெயில் அடித்தது. சுமார் 4 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பரவலாக மழை பெய்தது. சுமார் ½ மணிநேரம் பெய்த மழையால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று, ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயில் தணிந்து மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 3¼ மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளிலும், தெருக்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவான போதிலும், உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story