குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர் பொதுமக்கள் அவதி

அச்சரப்பாக்கம் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளான ஸ்ரீ ராமு நகர், அன்பு நகர், ராணியம்மாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அதிகமான மழை வெள்ள நீர் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த குடியிருப்பு சுற்றியுள்ள பகுதியிலும் மழை நீர் சூழ்ந்தது.பொதுமக்கள் வெளிவர முடியாதபடி மழைநீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றன. இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.மற்றும் இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நீர் அச்சரப்பாக்கம் பெருக்கருணை பிரதான நெடுஞ்சாலையில் சாலைக்கு மேல் 3 அடி உயரத்திற்கு மழை வெள்ளநீர் செல்வதால் இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியபடி செல்கின்றன.இதனால் போக்குவரத்து பாதித்து மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
Next Story