ஆவுடையார் கோவிலில் குடிகள் மாநாடு

ஆவுடையார் கோவிலில் குடிகள் மாநாடு

வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று குடிகள் மாநாடு நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம்,வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று குடிகள் மாநாடு நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1433ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று குடிகள் மாநாடு நடந்தது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்து 11 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலை, வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உத விகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆவுடையார்கோவில் சரகத் துக்கு உட்பட்ட குடிக்காடு, செல்வனேந்தல், பட்டமுடையான், கள்ளக்காத்தான், எசமங் களம், சிவஞானபுரம், புதுவாக்காடு, வலை யன்வயல்,கண்டையன்கோட்டை, மாகா ளியேந்தல், வேதினிவயல், முதுவளர்குடி, வெளிவயல், கீழ்க்குடி, புத்துவயல், உக்க டைசுப்பிரமணியபுரம், பூவளுர், உக்கடை• பவானி அம்பாள்புரம், வடவயல், பிராந்தனி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமா பந்தி நிகழ்வில் கிராம கணக்குகள் பார்வை யிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக் கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத் திக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன், தாசில்தார் மார்டின் லூதர்கிங், தனி தாசில்தார் ராஜேஸ் வரி, அலுவலக மேலாளர் (பொது) பவானி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story