வீடுகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பு

வீடுகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பு
வீடுகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பு
வீடுகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பு
திருப்போரூர் பேரூராட்சி, காலவாக்கத்தில் ஓ. எம். ஆர். , சாலை அருகே குடியிருப்புகள், விநாயகர் கோவில், அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன. நேற்று, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அங்குள்ள குடியிருப்பு வீடுகளை அகற்ற, காவல்துறையுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது, வீடுகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, “நாங்கள் 40 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வருவாய்த் துறை வாயிலாக முறையாக அளவீடு செய்ய வேண்டும், '' என, குடியிருப்புவாசிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின், வருவாய் துறை வாயிலாக அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வீடுகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இதுதொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அகற்றும்போது முறையாக தகவல் தெரிவிக்கப்படும், ” என்றனர்.

Tags

Next Story