குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடியில் பெய்த கன மழை காரணமாக குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக பிற்பகலில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக தூத்துக்குடி எம்.கே. தெரு, அந்தோணியார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் மழைநீர் சூழ்ந்தது இதனால் வீட்டுக்குள் மழை நீர் வந்ததால் வீட்டில் இருந்த மிக்ஸி, உள்ளிட்ட பொருட்களை கட்டிலில் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர்.

மேலும் வீட்டுக்குள் புகுந்த மழைதண்ணீரை வெளியேற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தெருக்களிலும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் உடனே மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story