பாலக்கோட்டில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
பாலக்கோடு நகரப் பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அலுவலக சுற்றுச்சூவரை ஒட்டி பாலக்கோடு நகரப்புறத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்கின்றது.
பல நாட்களாக தேங்கி நிற்கும் இந்த கழிவுநீரில் அவ்வப்போது மர்ம நபர்களால் குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் அந்த பகுதியை கடக்கும் போதெல்லாம் துர்நாற்றம் வீசுகின்றது.
எப்போது வேண்டுமானாலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சரி செய்து தரக் கோரி பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story