கசடு மேலாண்மை நிலையத்திற்கு எதிர்ப்பு
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
கசடு மேலாண்மை நிலையம் அமைக்க அந்த பகுதி சாதகமாக இல்லை என எதிர்ப்பு தெரிவித்தனர்
செட்டியபட்டி ஊராட்சியில் கசடு மேலாண்மை நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் ஆய்விற்கு வந்த திண்டுக்கல் ஆர்.டி.ஓ., கமலக்கண்ணனை முற்றுகையிட்டனர்.பேரூராட்சிகளில் கசடு மேலாண்மை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி ஆத்துார் ஒன்றியம் செட்டியபட்டி ஊராட்சி பகுதியில் கசடு மேலாண்மை சுத்திகரிப்பு நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.தகவலறிந்த ஊராட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன் , இடத்தை பார்வையிடுவதற்காக மட்டுமே வந்ததாகவும், கசடு மேலாண்மை அமைப்பதற்கு சாதகமாக இப்பகுதி இல்லை என கூற அப்பகுதியினர் கலைந்தனர்.
Next Story