தேர்தலுக்குப் பின் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்க வேண்டும் என வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம்......

தேர்தலுக்குப் பின் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்க வேண்டும் என வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம்......

 தீர்மானம்

திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்க வேண்டும் என வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்க வேண்டும் வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம். திருப்பூர், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் அரிசிக்கடைவீதியில் உள்ள அரிசி மண்டி வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்பிரமணியம், துணை தலைவர் முத்துவேலாயுதம், துணை செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, செல்வராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா கணேசன், பொருளாளர் அசோகன் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.இதில் வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் ஜூன் மாதம் 4-ந் தேதி வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து வணிகர்கள் சங்கங்கள் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

வருகிற 19-ந் தேதிக்கு பிறகு இந்த கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வணிகர்கள் கடைகளை அடைக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் எடுக்க முடிவு குறித்து திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story