காவல்துறை குறைதீர் முகாமில் 75 மனுக்கள் மீது தீர்வு - எஸ்பி நடவடிக்கை
குறைதீர் முகாம்
தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், 75 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில்,பொது மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட எஸ்பி ந. ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோவ முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களிலிருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்ப தகராறு உள்ளிட்ட 75 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, விசாரணை முடித்து வைக்கப்பட்டது. முகாமில் புதிதாக 45 மனுக்கள் பெறப்பட்டது. இதில் டிஎஸ்பி ராமச்சந்திரன், எஸ்ஐகள் இளமதி, திருமணிராஜ், ராமர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.