நாடக கலைஞர்களுக்கு கலைப்பேரொளி விருது வழங்க தீர்மானம்
கன்னியாகுமரி மாவட்டம் முள்ளஞ்சேரி வி. முத்தையன் கல்வி அறக்கட்டளை சார்பில் கலைஞர்களுக்கு கலைப்பேரொளி விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டைய விருது நாடக கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான இரண்டாவது ஆலோசனைக்கூட்டம் முள்ளஞ்சேரியில் நடைபெற்றது.
இதில் மூத்தகலைஞர்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் நாடகம் எழுத்து மற்றும் இயக்குநருக்கான விருது ஐரேனிபுரம் பால்ராசைய்யா , நாடக நடிகருக்கான விருது சுகுமாரன், நாடகம் காட்சி அமைப்பு ஒப்பனைபோன்ற துறைக்கான விருது ஒளிப்பாறை ரவி, இசை ,பாடல் போன்றவற்றுக்கான விருது வாவறை லாரன்ஸ் மற்றும் பிற கலைத்துறைக்கான விருது பத்திரிகையாளர் குழிவிளை விஜயகுமார் என ஐந்து பேருக்கு விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
விருதுக்கான தேர்வுப்பட்டியலை தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முளங்குழி பா.லாசர், வெளியிட்டார். முள்ளஞ்சேரி வி.முத்தையன் அறக்கட்டளை தலைவர் முனைவர் வி.வி.வினோத் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கவிஞர் ஜாண் குமரித்தோழன், பழனிச்சாமி, குமரிதீபம் பிலிப்போஸ்ஆகியோர் பங்கேற்றனர். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் முன்னிலை வகித்தார். பிப்ரவரி 4 தேதி நடைபெறவுள்ள இளம் முத்துக்களின் முத்தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.