முதல்வர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம்
திமுக நிர்வாகிகள் கூட்டம்
செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம். எல்.ஏ. ஆகியோரின் வழிகாட்டுதல்படியும், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ் முன்னிலையில் திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க.விற்கு உட்பட்ட மாநகர, துணை அமைப்பாளர்கள்,பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஆலோசனை கூட்டம் திருப்பூர் சந்தை பேட்டை அருகில் உள்ள எம்.எஸ்.ஆர். ராஜ் அலுவலகத்தில் நடந்தது.
இதற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சசி, ஜூன்னத், மாநகர துணை அமைப்பாளர்கள் தியாகு,தமிழரசு, விக்னேஷ், திருநாவுக்கரசு, அரவிந்த் மற்றும் பகுதி கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற மார்ச் 1-ம் தேதி திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி சார்பில் கழக நிர்வாகிகளோடு இணைந்து இனிப்பு வழங்குதல், அன்னதானம், ரத்ததானம், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. இளைஞர் அணி மாநாடு தீர்மானங்கள் விளக்க பொதுகூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள் தெற்கு மாநகரத்துக்கு உட்பட்ட வட்ட கழகங்களில் சிறப்பாக நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.