ஊராட்சி தலைவர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்க தீர்மானம்

ஊராட்சி தலைவர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்க தீர்மானம்

ஊராட்சி தலைவர்கள் சங்க கூட்டம் 

ஊராட்சி தலைவர்களின் பதவி காலம், ஐந்து ஆண்டுகளாக உறுதி செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த, கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், நடந்த கூட்டத்திற்கு, வாலாஜாபாத் வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பு செயலர் வள்ளியம்மாள், பொருளாளர் லெனின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள் உள்ளன. 202௧ல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பதவிக்காலம், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது என, சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஊராட்சி தலைவரின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் வரையில் வழங்க வேண்டும். மேலும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி ஊராட்சி தலைவர்களுக்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, ஊராட்சி தலைவர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story