சிவகாசியில் சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்க தீர்மானம்

சிவகாசியில் சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்க தீர்மானம்
சிவகாசி:சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று மாவட்ட மாநாட்டில் தீர்மானம்...
சிவகாசி:சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஹிந்த் மஸ்தூர் சபா விருதுநகர் மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது.மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்,மாநில துணை செயலாளர் மூக்கையா முன்னிலை வைத்தார்,மாவட்ட செயலாளர் சந்தனகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய தேசிய தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் சுப்பிரமணியன் மாநில செயல் தலைவர் சுப்பிரமணியபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,பச்சை உப்பு என்ற மூலப் பொருளை கொண்டு பட்டாசு உற்பத்தியினை மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.ஆனால் பச்சை உப்பு கொண்டு தான் மற்ற நாடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகின்றது.இந்தியாவில் மட்டும் தான் காற்று மாசுபாடு எற்படுவதாக தடை செய்யப்பட்டுள்ளது,

ஆகையினால் அதற்கு மாற்று மூலப்பொருள் கொண்டு அனைத்து ஆலைகளுக்கும் பார்முலாவை வழங்கி உற்பத்தினை மேற்கொள்ள அனுமதி தரவேண்டும்.ஆகவே அந்த சரவெடி உற்பத்தி தடையானையை சுப்ரிம் கோர்ட் ரத்து செய்ய மாநில,மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story