இரு தரப்பினர் இடையே இருந்த 30 வருட பிரச்சனைக்கு தீர்வு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் இரு தரப்பினர் இடையே இருந்த 30 வருட பிரச்சனையை சரி செய்து மாவட்ட எஸ்பி தேர் திருவிழாவை நடத்தி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் கடந்த 30 வருடங்களாக தேர் இழுப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்களும் பிரச்சனையும் இருந்து வந்ததது. இந்நிலையில் இந்த வருடம் கோவில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு பிரச்சனை நடந்து வந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துறையும் இணைந்து இரு தரப்பினரையும் சந்தித்து சமாதான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு ஜூன் 25 நேற்று மற்றும் ஜூன்26, ஆம் தேதி வேப்பந்தட்டை கிராமத்தில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் இருதரப்பினரும் இணைந்து நல்ல முறையில் தேர் திருவிழா நடத்தப்பட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தேரை இழுத்து சாமி தரிசனம் செய்து திருவிழாவை கொண்டாடினார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து செய்த இச்செயலுக்காக வேப்பந்தட்டை பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

Tags

Next Story