ஈரோடு மாவட்டத்திற்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை

ஈரோடு மாவட்டத்திற்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை

கடன் திட்ட அறிக்கை

நபார்டு வங்கி சார்பில் ஈரோடு மாவட்டத்திற்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவகை கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் கன்கரா வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கியின் சார்பில், ஈரோடு மாவட்டத்திற்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். ஈரோடு மாவட்டத்துக்கான கடன் திறனை ரூ.29683.27 கோடியாக நபார்டு வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2023-24 ஆம் ஆண்டு இலக்கை விட 28.30 சதவிகிதம் அதிகமாகும். வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத்தொழில்களுக்கான கடன் ரூ.13729.99 கோடிகளாகவும், துணி சிறு மற்றும் குறு (MSME) தொழில்களுக்கான கடன் ரூ.12908.96 கோடிகளாகவும், ஏற்றுமதிக்கு ரூ.390.75 கோடிகளாகவும், கல்விக்கடக்காக ரூ.466.92 கோடிகளாகவும், வீடு கட்டுதல்மற்றும் மீள்சக்தி (Renewable Energy) ஆகியவற்றுக்கு முறையே ரூ.1091.25 கோடி மற்றும் ரூ.94.87 கோடிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2022-2023 ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கி, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கி மற்றும் வங்கி கிளைகளுக்கு, மகளிர் திட்டம் சார்பில் பரிசுத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கினார்.

Tags

Next Story