மயிலாடுதுறை அருகே கிராமப் பெண்களுக்கு மரியாதை

மயிலாடுதுறை அருகே கிராமப் பெண்களுக்கு மரியாதை

பெண்களுக்கு மரியாதை 

மயிலாடுதுறை அருகே கிராமத்தில் பெண்களுக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்றதுடன் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாக கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பழையகூடலூர் ஊராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் இரா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிராமத்திலிருந்து வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பெண்களை கௌரவிக்கும் விதமாக வான வேடிக்கை முழங்க, கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கட்டு, அனைத்து பெண்களுக்கும் அன்பளிப்பு பரிசுகளும், உணவும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் கோயமுத்தூர் ஆராதனா நாட்டிய பள்ளி குரு மீனாட்சி சாகர் சிறப்புரையாற்றினார். பெண்களுக்காக புதுமையான முறையில் நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள்,

அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்களை பழைய கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story