வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ரூ.120 கோடியில் 12 ஏரிகள் மறுசீரமைப்பு: சிஎம்டிஏ

வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ரூ.120 கோடியில் 12 ஏரிகள் மறுசீரமைப்பு: சிஎம்டிஏ

CMDA

சென்னையில் நிலத்தடி நீர் அதிகரிப்பு, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் 12 ஏரிகள் ₹120 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரிகளை பராமரித்து, பாதுகாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 12 ஏரிகள் ₹120 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில், பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் உள்ளிட்ட 12 ஏரிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஏரிகள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் அதன் கட்டமைப்பை இழந்துவிட்டன. எனவே இந்த ஏரிகளும், அதன் முகப்பு பகுதிகளும் சீரமைக்கப்படுகின்றன. இதற்காக 10 ஆலோசகர்கள் நியமித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஏரிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய ஏரியின் தன்மை, நிலத்தின் அளவு, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் ஏரி அமைப்பு, முகப்பு தோற்றம், பறவைகளுக்கான வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் ஆகிய அனைத்தும் இதன் கட்டமைப்புகளில் ஒரு பகுதியாக அமைய உள்ளது. நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், ஏரியின் எல்லை மேம்பாடு, தூய்மையான கரை பகுதிகள், தோட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், வாகன நிறுத்தும் வசதிகள், ஆம்பி தியேட்டர்கள், உணவகம், நீர் விளையாட்டுகள், மீன்பிடிதளம், விளையாட்டு பகுதி பொது வசதி, படகு சவாரி போன்ற வடிவமைப்புகளும் இடம் பெற உள்ளது. குறிப்பாக ஏரிகளை நீலம் மற்றும் பச்சை என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக மேற்கொள்ளப்படும் சீரமைப்பால் ஏரிகள் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமையும். மேலும் மறுசீரமைக்கப்படும் ஏரிகளால் திறந்த நிலங்களாகவும், ஆக்கரமிப்புகள் இல்லாதவாறு அமைகிறது. என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story