ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு 

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு 

விபத்து 

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு .விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் விவேகானந்தா (73). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் சம்பவ தினம் ஆனைபாலம் அருகே நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் விவேகானந்தா மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது. அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி விவேகானந்தா உயிரிழந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story