தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க விழா
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: ஓய்வுபெற்ற காவலர்களுக்கு பணப்பலன் உள்ளிட்டவற்றை அரசு வழங்கும். மேலும் ஏதாவது பிரச்னைகள், குறைகள் இருந்து தெரிவித் தால், அதைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார் அவர்.
இவ்விழாவுக்கு மாவட்டத் தலைவர் எம். அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்டக் கருவூல அலுவலர் ஜி. கணேஷ்குமார் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வி. பேரிச்சாமி,எம். தமிழ்ச்செல்வன், எஸ். கணேசமூர்த்தி, கே. மகே சன், எஸ். இளம்பரிதி, எஸ்.ஆர்.ஜெ. இந்திரஜித், சி. ராஜமாணிக்கம், பொதுச் செயலர் ஜி. கலியமூர்த்தி, பொருளாளர் எஸ். உமாபதி, மாநில கொள்கை பரப்புச் செயலர் பி.மனோகரன், மாவட்ட இலக்கிய அணி செயலர் எஸ். அருளானந்து, உதவித் தலைவர் ராஜகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, எம். பிச்சைபிள்ளை வரவேற்றார். நிறைவாக, துணைப் பொருளாளர் ஏ.பி. ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவில் குடும்பப் பாதுகாப்பு நல நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.80 வயது தொடங்கும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் ராணுவத்துக்கு வழங்கும் இடதுக்கீட்டின்படி காவல் துறையிலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.